விராட் கோலியின் நாய் உயிரிழப்பு...

11 வருடங்களாக தாம் வளர்த்த நாய் உயிரிழந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

11 வருடங்களாக தாம் வளர்த்த நாய் உயிரிழந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 11 வருடங்களாக தமது வாழ்வை வசந்தமாக்கிய தனது செல்ல பிராணி புருனோ, உயிரிழந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். தனது நாயின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் கோலி குறிப்பிட்டுள்ளார். விராட் கோலியின் நாய் உயிரிழந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் RIP BRUNO என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிவிட்டரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com