சத்தீஸ்கர் இளைஞருக்கு போன் போட்ட விராட் கோலி, ABD - என்ன காரணம்?.. ஷாக்கான ரசிகர்கள்
புதிய சிம் வாங்கிய சத்தீஸ்கரைச் சேர்ந்த இளைஞருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய செல்போன் எண் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணிஷ் என்ற இளைஞருக்கு அந்த எண் தவறுதலாக ஒதுக்கப்பட்ட நிலையில் கோலி, ஏபி டி வில்லியர்ஸ்,
யஷ் தயால் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களிடமிருந்து அவருக்கு நேரடியாக அழைப்புகள் வந்தன. முதலில் அது கிண்டல் என நினைத்த மாணிஷ், பின்னர் கோலி நேரடியாக பேச, அதிர்ச்சி அடைந்தார். சில ரசிகர்கள், கோலியின் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வை நிறுத்தும்படி சொல்லுமாறு அவரிடம் கேட்டுள்ளனர். இந்த தகவல் வெளியில் கசிந்ததை தொடர்ந்து ரஜத் படிதாரின் புகாரின் பேரில் போலீசார் சிம் கார்டை மீட்டு ரஜத்திடம் ஒப்படைத்தனர்.
Next Story
