பி.டி.உஷா சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்

பி.டி.உஷா சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்
Published on

தடகள ஜாம்பவான் பி.டி.உஷாவின் 39 ஆண்டு கால தேசிய தடகள சாதனையை தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்துள்ளார். பெங்களூருவில் நடைபெறும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 56 புள்ளி 23 வினாடிகளில் இலக்கை கடந்தார். இதன்மூலம் கடந்த 1985ம் ஆண்டு 56 புள்ளி 80 வினாடிகளில் இதே இலக்கை கடந்த பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com