இந்திய U19 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் | Ayush Mhatre
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக, சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி, ஜூலை 23ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில்,19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். 35 பந்துகளில் சதம் விளாசி வரலாறு படைத்த 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியும், இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
Next Story
