அமெரிக்க ஓபன் - முதல் சுற்றில் டெய்லர் சபலென்கா, பிரிட்ஸ் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் sஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டவரான எமிலோ நவா உடன் மோதினார். அதில், சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீராங்கனை அரீனா சபலென்கா, தனது யு.எஸ். ஓபன் பட்டத்தை தக்கவைக்கும் முயற்சியில் சுவிட்சர்லாந்தின் ரெபெகா மசரோவாவுடன் மோதி 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்றுள்ளார்.
Next Story
