அமெரிக்க ஓபன் டென்னிஸ் - வைல்டு கார்டு என்ட்ரியாக வீனஸ் வில்லியம்ஸ்

x

தனது 45 வயதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு என்ட்ரியாக வீனஸ் வில்லியம்ஸ் களமிறங்கவுள்ளார். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இதன் மூலம் 44 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் களமிறங்கும் அதிக வயதுடையவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக அடுத்த வாரம் நடைபெறும் கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள வீனஸ் வில்லியம்ஸுக்கு வைல்டு கார்டு என்ட்ரி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்