அமெரிக்க ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் கால்பதித்தார் சபலென்கா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் கால்பதித்தார் சபலென்கா

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு பெலாரஸைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை அரினா சபலென்கா முன்னேறி உள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்டை சபலென்கா, எதிர்கொண்டார். போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சபலென்கா 6-க்கு 4, 6-க்கு 3 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் தொடர்ந்து 6-வது முறையாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள சபலென்கா, சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளார்.

#tennis #ArynaSabalenka #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com