அமெரிக்க ஓபன் - அரையிறுதிக்கு சின்னர் முன்னேற்றம்

x

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னர் (Jannik Sinner) , 10-வது நிலை வீரரான லோரென்சோவை (Lorenzo Musetti) வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர், லோரென்சோவுடன் மோதினார். இதில் சின்னர் 6-க்கு 1, 6-க்கு 4, 6-க்கு 2 என்ற நேர் செட் கணக்கில், லோரென்சோவை வீழ்த்தினார். இதை தொடர்ந்து, அரையிறுதி போட்டியில் சின்னர், கனடாவின் 25-வது நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமை (Felix Auger-Aliassime) எதிர்கொள்ள உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்