அமெரிக்க ஓபன் - காலிறுதிக்கு அல்கராஸ் முன்னேற்றம்

x

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் வீர‌ர் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-ஆவது சுற்றில், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்னெக் (Arthur Rinderknech) உடன் கார்லோஸ் அல்கராஸ் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7க்கு 6, 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில், செக் குடியரசின் லெஹக்காவை அல்கராஸ் எதிர்கொள்ள உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்