

டோக்கியோ ஒலிம்பிக் துடுப்புப் படகு போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் அணியும் மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது. இன்று நடந்த கோக்லெஸ் பிரிவு துடுப்புப் படகுப் போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் அணி, பந்தய தூரத்தை 5 நிமிடங்கள் 42 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றது. இதேபோல், ஆஸ்திரேலிய மகளிர் அணியும் பந்தய தூரத்தை 6 நிமிடங்கள் 15 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.