TNPL | CSG | "TNPL நாக்-அவுட் சுற்றிலும் சேப்பாக் சிறப்பாக விளையாடும்" - சேப்பாக் கேப்டன் பாபா அபரஜித்
டிஎன்பிஎல் தொடரின் நாக்-அவுட் சுற்றிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாட சேப்பாக் அணி திட்டமிட்டு இருப்பதாக கேப்டன் பாபா அபரஜித் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த பாபா அபரஜித், நடப்பு சீசனில் சேப்பாக் அணி சிறப்பாக விளையாடி இருப்பதாகவும், நாக்-அவுட் சுற்றிலும் அது தொடரும் என்று கூறினார். போட்டியின் சூழலைப் பொறுத்து இறுதி ஓவர்களை வீசும் பவுலர்களை தேர்வு செய்வதாகவும் பாபா அபரஜித் தெரிவித்தார்.
Next Story
