டிஎன்பிஎல் - சிஎஸ்ஜியை வீழ்த்தி திண்டுக்கல் ஃபைனலுக்கு தகுதி
டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. முதலில் விளையாடிய சேப்பாக் அணி, 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 41 பந்துகளில் 81 ரன்களும், கேப்டன் அப்ரஜித் 44 பந்துகளில் 67 ரன்களும் குவித்தனர். பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதிரடியாக விளையாடிய விமல் குமார், 30 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 65 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Next Story