டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் - மதுரையை வீழ்த்திய நெல்லை அணி

மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.6 ஆவது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள்...
x

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் - மதுரையை வீழ்த்திய நெல்லை அணி

மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

6 ஆவது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற 10 ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்தது.

பின்னர், 210 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் நெல்லை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்