பெரியசாமியின் திறமையை சரியாக கணித்த சிவந்தி ஆதித்தன் - இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என எதிர்பார்ப்பு?

டிஎன்பிஎல் தொடரில் தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் பந்து வீச்சாளர் பெரியசாமி.
பெரியசாமியின் திறமையை சரியாக கணித்த சிவந்தி ஆதித்தன் - இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என எதிர்பார்ப்பு?
Published on
தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் பெருத்த ஆராவாரத்துடன், 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.8 அணிகள் மோதியதில், திண்டுக்கல் டிராகன்ஸும், சேப்பாக் சூப்பர் கில்லீஸும் இறுதிக் போட்டிக்கு தகுதி பெற்று களம் இறங்கின.சென்னையில், நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில்,டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்திருந்தது.127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தது சேப்பாக் அணி.இரண்டாவது ஓவரை வீச வந்த வேகப்பந்து வீச்சாளர் பெரியசாமி,திண்டுக்கல் அணியின் கேப்டன் ஜெகதீசன், அடுத்து வந்த சதுர்வேத் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது.கடைசி ஓவரை வீச வந்த பெரியசாமி, அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சேப்பாக் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.சர்வதேச போட்டிகளில், இறுதி ஓவரை வீசும் இலங்கை பந்து வீச்சாளர் மலிங்கா.. தனது ஆக்ரோஷமான பந்து வீச்சால் எதிரணியை திணறடிப்பது போல பெரியசாமியின் பந்து வீச்சு இருந்ததாக கிரிக்கெட் ரசிகர்களின் உற்சாக குரல் ஸ்டேடியம் முழுவதும் எதிரொலித்தது.சேப்பாக் அணியின் பந்து வீச்சாளர் பெரியசாமி 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்தார்.தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசிய பெரியசாமிக்கு தொடர் நாயகன் விருதும், இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் நட்சத்திர பவுலர் பெரியசாமிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.பெரியசாமியின் பந்து வீச்சு சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் கவனிக்கப்பட வேண்டிய நபர் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.
X

Thanthi TV
www.thanthitv.com