TNPL 2026| அடுத்த வாரம் தமிழகத்தின் IPL ஆரம்பம்..!
ஆகஸ்ட் 4 தொடங்கி 28 வரை நடைபெறும் TNPL 10-வது சீசன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் TNPL 10-வது சீசன் ஆகஸ்ட் 4 முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுடன், புதிதாக VIDA கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளும் இணைந்துள்ளன. போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானம் மற்றும் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்த சீசனில் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுகிறார். TNPL 10-வது சீசன் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் 8 அணிகளின் கேப்டன்களுடன், திருச்சி அணியின் வீரரான வாஷிங்டன் சுந்தரும் பங்கேற்றார்
