டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி
Published on
திண்டுக்கல் என் பி ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 17 புள்ளி 4 ஓவரிலேயே 190 ரன்கள் அடித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com