TNPL பிளேஆஃப்க்குள் நுழைந்த திருச்சி அணி...

x

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நகரில் நடந்த டிஎன்பிஎல் கடைசி லீக் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி, திருச்சி அணி தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த திண்டுக்கல் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் திருச்சி அணி தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் முதல் தகுதி சுற்றுப் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் விளையாட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்