டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு திரும்பும் திலக் வர்மா"
டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு திரும்பும் திலக் வர்மா"
காயம் காரணமாக இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி உள்ள திலக் வர்மா, டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா ? என்று ரசிகர்கள் கவலை கொண்டிருந்த நிலையில், அவர்களை மகிழ்விக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் தனது உடற்பயிற்சி வீடியோவை திலக் வர்மா வெளியிட்டுள்ளார்.
"எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் திரும்ப வருகிறேன்" என்றும் அவர் அதில் கேப்ஷன் செய்திருப்பது எதிர்பார்த்ததை விட விரைவில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையேயான டி20 போட்டிகளில் திலக் வர்மா இணைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடதுகை பேட்ஸ்மேனான திலக் வர்மா, இந்தியாவின் தவிர்க்க முடியாத முதன்மை வீரராக பார்க்கப்படுவதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவதை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
