``விடுகதையா இந்த IPL.. விடை தருவார் யாரோ’’ - தொட்டு தொடரும் CSK-வின் Choke பாரம்பரியம்
ராஜஸ்தானிடம் சிஎஸ்கே அணி தோல்வி
ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் ராஜஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோல்வி அடைந்தது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. மூத்த வீரர்கள் பெரிதாக பங்களிக்காத நிலையில், அதிகபட்சமாக இளம் வீரர்கள் ஆயுஷ் மாத்ரே (Ayush Mhatre) 43 ரன்களும் பிரெவிஸ் (Brevis) 42 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. 19 பந்துகளில் 36 ரன்கள் அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, கேப்டன் சாம்சனுடன் இணைந்து அதிரடி காட்டிய 14 வயது வீரர் சூர்யவன்ஷி,, அரைசதம் அடித்தார். 57 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, 41 ரன்களில் சாம்சன் கேட்ச் ஆனார். அடுத்து வந்த துருவ் ஜுரெலும் ஹெட்மயரும் அதிரடியாக ஆட, 18வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்த நிலையில் இலக்கை எட்டிய ராஜஸ்தான்,, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் 10வது தோல்வியை சந்தித்த சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்கிறது.
