PAK Vs ENG | பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த அணி

பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த அணி

#WorldCup | #T20WorldCup | #Crikcet | #SportsUpdate | #PAKVsENG | #ThanthiTV PAK Vs ENG | பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த அணி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. குரூப் 2 வில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி, இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியினர் தொடக்கத்தில் மோசமாக ஆடினாலும், அதன் பின் ஆட்டத்தில் விறுவிறுப்பை காட்டினர். கேப்டன் ஹேரி புருக் மற்றும் வில் காக்ஸ் இருவரும் சிறப்பாக ஆடினர். ஹேரி புருக் 50 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். 19 புள்ளி ஒரு ஓவரில், எட்டு விக்கெட் இழந்திருந்த இங்கிலாந்து அணி, வெற்றி பெற்றதை அடுத்து, அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com