தவானை Impress செய்த சுட்டிக்குழந்தை வைபவ் சூர்யவன்ஷி
சாதனை வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, ஷிகர் தவான் வாழ்த்து
35 பந்துகளில் சதம் அடித்த 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்சிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கூறுகையில், வைபவ் சூர்யவன்ஷியின் தன்னம்பிக்கை மற்றும் விளையாட்டு திறமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.
Next Story
