ஒரே ஓவரில் மாறிய மேட்ச் - முரட்டு வெற்றியால் பாயிண்ட்ஸ் டேபிளில் அதிரடி மாற்றம்
வான்கடேவுல முதல்ல பேட்டிங் செய்த மும்பை டீம்க்கு ஓப்பனர்ஸ் அதிரடி தொடக்கம் கொடுத்தாங்க. அடுத்தடுத்து 2 சிக்ஸ் பறக்கவிட்ட ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் பந்துல அவுட் ஆனாரு.
தொடக்க வீரர் ரிக்கல்டன் செம்ம அதிரடியா விளையாடி 32 பந்துல 58 ரன் அடிச்சாரு ரிக்கல்டன்.. இறங்குனதுல இருந்தே அதிரடியா விளையாடுன சூர்யகுமார் யாதவ், 28 பந்துல 4 SIX, 4 FOUR அடிச்சி 54 ரன் சேர்த்தாரு.
கடைசியா நமன் திர் 11 பந்துல 25 ரன் அடிக்க, 20 ஓவர்ல 215 ரன் சேர்த்துச்சி மும்பை..
216 ரன் அடிச்சா வெற்றினு இறங்குன லக்னோவுக்கு மார்க்ரம் 9 ரன், புரன் 27 ரன், பண்ட் 4 ரன் ஏமாற்றம் தந்தாங்க.
கொஞ்சம் நம்பிக்கை கொடுத்த மிச்செல் மார்ஷும் 34 ரன்னும், பதோனி 35 ரன் அடிச்சி ஆட்டமிழக்க, லக்னோ டீம் 20 ஓவர்ல 161 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆயிடுச்சி...
அபாரமா பந்துவீசுன பும்ரா 4 விக்கெட்டும், செம்மையா போட்ட வில் ஜாக்ஸ் 2 விக்கெட் வீழ்த்தி அசத்துனாரு.
இந்த வெற்றி மூலம் ஐபிஎல் வரலாற்றுல 150வது வெற்றிய பதிவு செஞ்சது மும்பை டீம்...
