ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு பின் ஓய்வை அறிவித்த பிரபல வேகப்பந்து வீச்சாளர்

ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு பின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். நடப்பு ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில், 600 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட் பெற்றார். இந்நிலையில், அவர் தனது 17 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார். மேலும், ஸ்டூவர்ட் பிராட் தனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக் காதல் இருப்பதாகவும், அதனால் தனது கடைசி போட்டி ஆஷஸ் தொடராக இருக்க வேண்டுமென விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com