விலகிய Dream 11 - Empty-யாக விளையாட போகும் இந்திய அணி
இந்திய அணி, ஸ்பான்சர் இல்லாமல் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி ஸ்பான்சரான Dream11 ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. 358 கோடி ரூபாய் மதிப்பிலான
Dream11 ஒப்பந்தம் 2026 வரை இருந்தும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டங்கள் காரணமாக, ஸ்பான்ஸிப்பில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. புதிய ஸ்பான்சர் ஏலத்திற்கான கடைசி தேதி, செப்டம்பர் 12ம் தேதி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய ஸ்பான்சருக்கு புகையிலை, சூதாட்டம், கிரிப்டோ உள்ளிட்ட துறைகள் தகுதியற்றவை என BCCI தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பையில் இந்திய அணி ஸ்பான்சர் இன்றி விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story
