Suryakumar Yadav | "அதுக்கு தான் காத்துனு இருக்கோம்.."- IND Vs PAK போட்டி..சூர்யகுமார் சரவெடி பேச்சு

"அதுக்கு தான் காத்துனு இருக்கோம்.."

#SuryakumarYadav | #INDVsPAK | #Cricket | #SportsUpdate | #ThanthiTV Suryakumar Yadav | "அதுக்கு தான் காத்துனு இருக்கோம்.." - IND Vs PAK போட்டி.. கேப்டன் சூர்யகுமார் சரவெடி பேச்சு டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட இந்திய அணி தயாராக இருப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்களுக்கான விமான டிக்கெட் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கைக்கு செல்லவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மாட்டோம் என்று இந்தியா கூறவில்லை என்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணி விளையாடும் என்றும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com