“அந்த பையனுக்கு பயமே இல்லை”.. 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் தொடர்ல சூறாவளியா சுழன்றடிச்சு 14 வயசு வீரர் சூர்யவன்ஷி அடிச்ச சாதனை சதத்தால,, குஜராத்த ஊதித்தள்ளி இருக்கு ராஜஸ்தான்...
ஜெய்ப்பூர்ல நடந்த 47வது லீக் போட்டில முதல்ல குஜராத் பேட்டிங் செய்ய, கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி வழக்கம்போல சிறப்பான ஸ்டார்ட் கொடுத்தாங்க...
கில் அரைசதம் அடிச்சு அசத்த,, கன்சிஸ்ட்டன்ட்டா consistent ஆடிட்டு வர்ர சாய் சுதர்சன் 39 ரன்னுக்கு ஆட்டமிழந்தாரு... அடுத்து வந்த ஜாஸ் பட்லர் கில்லோட சேர்ந்து வாணவேடிக்கை காட்ட குஜராத் ஸ்கோர் உயர்ந்துச்சு...
84 ரன்னுல கில் ஆட்டமிழக்க, மறுமுனைல சிக்சர்கள பறக்கவிட்டு அரைசதம் அடிச்சாரு பட்லர்.... 20 ஓவர் முடிவுல 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவிச்சுச்சு குஜராத்...
அடுத்து 210 ரன் இலக்க நோக்கி ஆடுன ராஜஸ்தான் டீம்ல, 14 வயசு வீரர் வைபவ் சூர்யவன்ஷி,,, ஜெய்ஸ்வால் ஜோடி மிரட்டலான தொடக்கம் தந்தாங்க... கொஞ்சம் கூட பயப்படாம சீனியர்ஸ் பவுலிங்க பதம் பார்த்தாரு சூர்யவன்ஷி...
ஆரம்பத்துல இருந்தே சிக்சர் மழை பொழிஞ்ச சூர்யவன்ஷி வெறும் 17 பந்துல அரைசதம் அடிச்சு அதகளப்படுத்துனாரு,...
அரைசதம் அடிச்சதுக்கு அப்றோம் சூறாவளியா சுழன்றடிச்ச சூர்யவன்ஷி, குஜராத் பவுலிங்க சிதறடிச்சாரு....
குறிப்பா கரீம் ஜனத் Karim Janat வீசுன 10வது ஓவர்ல 30 ரன் அடிச்சு குஜராத் டீம கதிகலங்க வைச்சாரு சூர்யவன்ஷி.... 10 ஓவர்லயே 144 ரன் குவிச்சுச்சு ராஜஸ்தான்...
நான் பயமறியான்னு பட்டய கிளப்புன சூர்யவன்ஷி, ரஷீத் கான் ஓவர்ல சிக்ஸ் அடிச்சு வெறும் 35 பந்துல சதம் விளாசி சாதனை படைச்சாரு... ஐபிஎல் வரலாற்றுல இது இரண்டாவது அதிவேக சதம்....
மிக இளம் வயதுல ஐபிஎல் சதம் அடிச்சு சரித்திரம் படைச்ச சூர்யவன்ஷி 11 சிக்ஸ், 7 ஃபோர் எடுத்து 101 ரன்னுக்கு ஆட்டமிழக்க, மிச்ச ரன்கள ஜெய்ஸ்வால், கேப்டன் ரியான் பராக் ஜோடி அடிச்சாங்க....
16வது ஓவர்லயே இலக்க எட்டுன ராஜஸ்தான், 8 விக்கெட் வித்தியாசத்துல அபார வெற்றி பெற்றுச்சு...
ஐபிஎல்ல கன்னிச்சதம் அடிச்சு ஆட்டநாயகன் ஆன 14 வயசு சூர்யவன்ஷி,,, பீகார் மாநிலத்த சேர்ந்தவர்... 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அவர ஏலம் எடுத்தப்பவே பேசுபொருளானாரு..
