2024ல் சிறந்த டெஸ்ட் வீரர் - மகுடம் சூடிய பும்ரா | Bumrah | ICC Men's Test Cricket | ThanthiTV
ஐசிசியின் 2024ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை விராட் கோலி வென்றிருந்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
