சொந்த ஊரில் மண்ணைக் கவ்விய தெலுங்கு டைட்டன்ஸ்... தமிழ் தலைவாஸ் மிரட்டல் வெற்றி
புரோ கபடி லீக்கின் தொடக்க போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி திரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
புரோ கபடி லீக்கின் 12வது சீசன் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரம்பம் முதலே போட்டி விறுவிறுப்பாக சென்ற நிலையில், முதல் பாதியில் 14க்கு 13 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடியதால், போட்டி திக் திக் என நகர்ந்தது. கடைசியாக 38க்கு 35 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் திரில் வெற்றியை ருசித்தது. குறிப்பாக கடைசி நிமிடத்தில் கேப்டன் பவன் ஒரே ரெய்டில் 3 புள்ளிகள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
Next Story
