Hockey India Masters Cup 2025 | ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பையை வென்று தமிழ்நாடு அணி சாதனை
40 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதலாவது ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பையை தமிழ்நாடு ஹாக்கி ஆடவர் அணி வென்றது.
சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் மகாராஷ்டிரா அணியை 5க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிர் பிரிவில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு திமுக எம்.பி கலாநிதி வீராசாமி, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஷ்ரா ஆகியோர் கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.
Next Story
