டி20 உலககோப்பை - சூப்பர் 8 சுற்றில் இலங்கை படுதோல்வி
டி20 உலககோப்பை - சூப்பர் 8 சுற்றில் இலங்கை படுதோல்வி
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.
பின்னர், களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த நிலையில், இறுதியாக இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவர்களிலேயே 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து படுதோல்வியடைந்தது. தனது சிறந்த பங்களிப்புக்காக ஆல்ரவுண்டரான இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
