டி.20 உலகக்கோப்பை - வெளியேறியது இலங்கை
டி.20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில், 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாண்ட்னர் 47 ரன்கள் எடுத்தார்...
பின்னர், 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதற்கு பின் வந்த வீரர்களும் சோபிக்க தவறியதால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதுபெற்றார். இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுடன், தொடரில் இருந்தும் வெளியேறியது.
