

டி.20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டியது..