டி20 மகளிர் உலக கோப்பை தகுதி சுற்று - சாதனை படைத்த நெதர்லாந்து
டி20 மகளிர் உலக கோப்பை தகுதி சுற்று - சாதனை படைத்த நெதர்லாந்து
டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்று நெதர்லாந்து அணி சாதனை படைத்துள்ளது.
வங்கதேசம், ஸ்காட்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ள, டி20 மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டிகள் நேபாளத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள், இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்தன.
இதையடுத்து இங்கிலாந்து, வேல்ஸில் நடைபெறவுள்ள டி20 மகளிர் உலக கோப்பையில் பங்கேற்க வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் தகுதிபெற்றதாக ஐசிசி அறிவித்துள்ளது.
Next Story
