முதல் டி20 - இந்திய அணி அபார பந்துவீச்சு

முதல் டி20 - இந்திய அணி அபார பந்துவீச்சு
x

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, அர்ஷ்தீப் சிங் தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து அவர் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மிடில் ஓவரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், ஒருபக்கம் இங்கிலாந்து கேப்டன் பட்லர் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். எனினும், மறுமுனையில் தொடர்ந்து விக்கெட் வீழ்ந்ததால் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.


Next Story

மேலும் செய்திகள்