2026-ல் ஓய்வு பெறும் சுவிஸ் டென்னிஸ் வீரர் வாவ்ரிங்கா
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பிரபல சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, அடுத்த ஆண்டு ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் பல சாதனைகளை படைத்துள்ள வாவ்ரிங்கா, வரும் மார்ச் மாதம் 41 வயதை எட்டும் நிலையில், ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2015ல் பிரெஞ்ச் ஓபன் மற்றும் 2016ம் ஆண்டில் யு.எஸ். ஓபன் பட்டத்தையும் வாவ்ரிங்கா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
