Suryavanshi | ``யாருடா இந்த பொடியன்..’’ - உலகையே ஒரு நொடியில் தன் பக்கம் திருப்பிய சூர்யவன்ஷி
U-19ல் புது வரலாறு படைத்த சூர்யவன்ஷி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 80 பந்துகளில் 175 ரன்களை விளாசியதன் மூலம் பல சாதனைகளை முறியடித்திருக்கிறார், இந்தியாவின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை இறுதி போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை இந்தியாவின் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் தன்வசமாக்கியுள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக 150 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் புரிந்து சூர்யவன்ஷி கிரிக்கெட் ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும், 2026 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் 439 ரன்களை குவித்ததன் மூலம் இந்திய வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை தொடரில் 2004ல் 505 ரன்கள் குவித்திருந்த ஷிகர் தவானுக்குப் பிறகு அதிக ரன்களை குவித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். மேலும் இந்த தொடரில் இரண்டாவது அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையையும் சூரியவன்ஷி நிகழ்த்தினார்
