Suryavanshi | கிரிக்கெட்டில் செஞ்சூரி போட்டு பப்ளிக் எக்ஸாமில் கோட்டை விட்ட சூர்யவன்ஷி
கிரிக்கெட்டில் செஞ்சூரி போட்டு பப்ளிக் எக்ஸாமில் கோட்டை விட்ட சூர்யவன்ஷி - தந்தை சொன்ன வார்த்தை #suryavanshi #suryavanshiexam சூர்யவன்ஷி பப்ளிக் எக்ஸாம் எழுதாதது குறித்து தந்தை விளக்கம் ஐபிஎல் ஏலத்தில் இளம் வயதில் தேர்வாகி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, இந்த ஆண்டு தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத நிலையில் இது குறித்து அவரது தந்தை சஞ்சீவ் விளக்கமளித்துள்ளார். அதன்படி வைபவ் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதாகவும், அவர் தேர்வு எழுதச் சென்றால் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் கவனம் அவர் மீது திரும்பும் எனவும், இதனால் மற்ற மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இடையூறு ஏற்படும் என்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அடுத்த ஆண்டு தனித்தேர்வராக தேர்வை எழுதுவார் என்றும், தற்போது பீகார் ரஞ்சி அணி மற்றும் இந்திய யு-19 அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவரது தந்தை கூறியுள்ளார்.
