மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி - ரியல் கெத்தை காட்டிய சென்னை கண்ணகி நகர் அணி
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான, பெண்களுக்கான கபடி போட்டியில், சென்னை கண்ணகி நகர் பெண்கள் அணியினர் அதிக புள்ளிகள் பெற்று, வெற்றி வாகை சூடினர். அலைகடல் கபாடி கழகம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், பல்வேறு மாவட்டவங்களை சேர்ந்த 17 அணிகள் கலந்து கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 10ற்கு 42 என்ற புள்ளி கணக்கில் சென்னை கண்ணகி நகர் அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், சேலம் அணியினர் 15ற்கு 25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.
Next Story
