ஒருநாள் தொடர் - ஆஸி.யை ஒயிட்வாஷ் செய்த இலங்கை

x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், 174 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக குசால் மென்டிஸ் (Kusal Mendis) 101 ரன்களும், அசலங்கா 78 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலியா, இலங்கையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை சார்பில் வெல்லாலகே (Wellalage) 4 விக்கெட்டுகளையும், Asitha Fernando மற்றும் Wanindu Hasaranga தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் இலங்கை, ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.


Next Story

மேலும் செய்திகள்