

CLIF DIVING... உச்சியிலிருந்து தண்ணீருக்குள் டைவ் அடிப்பதே இந்த விளையாட்டாகும்.
குறிப்பிட்ட உயரத்தில் நிற்கும் வீரர்கள் , தண்ணீரில் குதிக்கும் போது , உருண்டு கொண்டே விழுவார்கள்..
வீரர்கள் குதிக்கும் போது எந்தளவிற்கு சாகசம் மேற்கொள்கிறார்களோ, அத்ன் அடிப்படையில் நடுவர்கள் புள்ளிகளை வழங்குவார்கள். இதனை அடிப்படையாக வைத்தே வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள்.
குதிக்கும் போது கொஞ்சம் குறித் தவறினாலோ, உயிர் நமது கையில் இல்லை. இந்த விளையாட்டில் பல விபத்துகளும் நிகழ்ந்து வீரர்கள் உயிரை விட்டுள்ளனர்.
சாகச அடிப்படையிலான இந்தப் போட்டி ஆண்கள் மட்டும் விளையாடுவதில்லை. பெண்களும் ஆண்களுக்கு நிகராக ஜொலித்து உள்ளனர்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள இந்த விளையாட்டு சாகச அடிப்படையில் கொண்டது. சமீபத்தில் போஸ்னியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் பிரிட்டன் வீரர் GARY யும், மகளிர் பிரிவில் ஆண்டிரியானா சாம்பியன் பட்டத்தை வென்றனர்.