உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகள் கணிக்க முடியாத அளவிற்கு சம பலத்துடன் இருப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்
உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு
Published on
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகள் கணிக்க முடியாத அளவிற்கு சம பலத்துடன் இருப்பதாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகளுக்கு திரும்பி டெல்லி அணிக்கு ஆலோசகராக பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.தற்போது நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டி1992 ஆம் ஆண்டை போல கணிக்க முடியாத அளவிற்கு உள்ளதாகவும், ஒவ்வொரு அணியிலும் தனிதிறமைகள் கொண்ட வீரர்கள் அங்கம் வகிப்பதாகவும் கூறினார். இந்திய வீரர்கள் முழு திறனையும் களத்தில் காட்டினால் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கங்குலி தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com