14 வயதில் உலகை திரும்பி பார்க்க வைத்த சூர்யவன்ஷி.. நடுங்கி போன கிரிக்கெட் ஜாம்பவான்கள்

x

14 வயசுல இந்தியா மட்டுமில்ல, கிரிக்கெட் உலகையே வியக்க வச்சிட்டாரு வைபவ் சூரியவன்ஷி..

குஜராத் டீமுக்கு எதிரா 35 பந்துல செஞ்சுரி அடிச்சி மிரட்டுன சூரியவன்ஷி, BOSS BABY-ஆ கொண்டாடப்படுறாரு..

இந்த ஆட்டத்தை உலகமே கொண்டாட அவங்க டீம் கோச்சான டிராவிட் கால் வலியையும் பொருட்படுத்தாம வீல் ச்சேர்ல இருந்து எழுந்து ஆர்ப்பரிச்சதுலாம் செம்ம MOMENT.

மேட்ச் முடிஞ்ச பிறகு தன்னோட அப்பாகிட்ட வைபவ் பேசுன வீடியோவுக்கு ஹார்ட்டின் பறக்குது.

வைபவோட அற்புத இன்னிங்ஸ எல்லோரும் புகழ்ந்துட்டு வர, சிலர் நான்லாம் 14 வயசுல என்னா பண்ணிட்டு இருந்தேன் தெரியுமானு வைபவ பாராட்டியும், தங்களை தாங்களே கிண்டல் செய்தும் மீம்ஸை போட்டுட்டு வராங்க..

இதுஒருபக்கம்னா, கொரோனா லாக்-டவுன்ல மொட்ட மாடியில வைபவ் பயிற்சி எடுத்த வீடியோஸை பகிர்ந்து, பையன் எங்க இருந்து எங்க வந்துட்டான் பாருங்கனு சிலாகிக்குறாங்க....

இதுமட்டுமில்ல, 2050 வரைக்கும் வைபவ் ஐபிஎல் விளையாண்டா, அப்ப கூட இப்போதைய தோனி வயச தொட்டுருக்க மாட்டாருன்னு ஒருத்தவர் போட்ட போஸ்ட் செம்ம வைரல்...

சூரியவன்ஷி ஆட்டத்தை பார்த்து வியந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிச்சிருக்கு...


Next Story

மேலும் செய்திகள்