சர்வதேச தடகள போட்டியில் சோமாலியா சொதப்பல்

சர்வதேச தடகள போட்டியில் சோமாலியா சொதப்பல்
Published on

சர்வதேச தடகள போட்டியில் சோமாலிய வீராங்கனை சொதப்பியதை அடுத்து, அந்நாட்டு தடகள கூட்டமைப்பின் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீனாவில் நடைபெற்ற நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், சோமாலியாவின் நஸ்ரா அபுகர் அலி கலந்து கொண்டார். மற்றவர்கள் நூறு மீட்டரை சுமார் 11 வினாடிகளில் ஓடி முடிக்க, 21 வினாடிகள் எடுத்துக்கொண்ட நஸ்ரா பொறுமையாக எல்லைக் கோட்டை கடந்தார். சர்வதேச அளவில் இதனால் சோமாலியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் முகமது பர்ரே, சட்ட நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com