CSG Win || `சொல்லி அடித்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ்' - தொடர்ச்சியாக ஏழாவது முறை அபார வெற்றி

x

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் தொடர்ச்சியாக 7-வது வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில், மதுரை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அசத்தல் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய சேப்பாக் அணி, 9 புள்ளி 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. பூச்சி தொல்லையால் ஆட்டம் 14 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்காக மாற்றி அமைக்கப்பட்டது. வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 12 புள்ளி 5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 114 ரன்கள் எடுத்து சேப்பாக் அணி வென்றது. இத்துடன், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அனைத்து லீக் ஆட்டங்களிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்