களத்தில் ஆக்ரோஷம் - சிராஜுக்கு ஐசிசி எடுத்த அதிரடி முடிவு | Cricket | Siraj | Sports | Thanthi TV

x

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, சிராஜ் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். களத்தை விட்டு வெளியேறுமாறு சிராஜ் சைகை செய்த நிலையில் ஹெட்டும் ஆக்ரோஷமாக பேசியபடி பெவிலியன் திரும்பினார். இந்த சம்பவம் குறித்து இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டதால் சர்ச்சை ஆனது. இந்நிலையில் நடத்தை விதிகளை மீறியதாக சிராஜ்க்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. ஹெட்டுக்கு அபராதம் விதிக்காமல் ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இரு வீரர்களுக்கும் தலா ஒரு டீ-மெரிட் புள்ளியையும் ஐசிசி வழங்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்