T20 Worldcup | Eng vs WI | வேர்ல்டுகப்பில் ஷாக் ட்ரீட்மென்ட் - இங்கிலாந்தை கதறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்
#engvswi #t20worldcup இங்கிலாந்தை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி டி20 உலகக் கோப்பை தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ஷெர்பேன் ரூதர்போர்டு அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்தார். ரோஸ்டன் சேஸ் 34 ரன்கள் எடுத்தார். 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 19 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், குரூப் ‘சி’ புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
