விலகிய துபே.. ஆட்டத்தை மாற்றிய ரானா.."இந்த வெற்றி செல்லாது" - கொதிக்கும் இந்திய ரசிகர்கள்..

x

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கன்கசன் சப் (CONCUSSION SUB) முறையில் மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை களமிறக்கியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கிலாந்து வீரர் ஜேமி ஓவர்டன்(JAMIE OVERTON) வீசிய பந்து ஷிவம் துபே தலையை தாக்கியதால், அவர் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். அவருக்கு பதிலாக CONCUSSION SUB முறையில் மாற்று வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ரானா (HARSHIT RANA), 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஆல் ரவுண்டர் ஷிவம் துபேவிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளரை களமிறக்க போட்டி நடுவர் எப்படி சம்மதித்தார் என இங்கிலாந்து கேப்டன் பட்லர், முன்னாள் வீரர்கள், இந்திய ரசிகர்கள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்