ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற ஆஸி.

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற ஆஸி.
Published on

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. எடின்பர்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. 7 சிக்சர்களைப் பறக்கவிட்ட ஜோஷ் இங்லிஸ் (Josh Inglis) சதம் விளாசி அசத்தினார். பின்னர் 197 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஸ்காட்லாந்து அணி, 17வது ஓவரில் 126 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்றது.

X

Thanthi TV
www.thanthitv.com