மாற்றி எழுதப்பட்ட 92 வருட வரலாறு... 18வது முயற்சியில் நியூசிலாந்து படைத்த சாதனை

x

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே 242 மற்றும் 211 ரன்களும், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சில் 235 ரன்களும் எடுத்தன. 267 ரன்கள் இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் 32வது சதத்தை விளாசினார். இதன்மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வென்று நியூசிலாந்து ஒயிட்வாஷ் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்