சவுதி சூப்பர் கப் கால்பந்து போட்டி - ரொனால்டோ அணி தோல்வி
ஹாங்காங்கில் நடைபெற்ற சௌதி சூப்பர் கப் இறுதிப் போட்டியில் ரோனால்டோவின் அணி, தோல்வி அடைந்த்து. இந்த போட்டியில் ரொனால்டோவின் அல்-நசர் அணியும், அல்-அஹ்லி அணியும் மோதின. இதில் ரொனால்டோ, அல்-நசர் அணிக்காக தனது 100ஆவது கோலை அடித்தார். போட்டி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் டிரா ஆனது. டை பிரேக்கர் மூலம் போட்டியின் வெற்றியை தீர்மானிக்க பெனாலிட்டி ஷூட் நடத்தப்பட்டது. இதில் அல்-நசர் அணியை, 5க்கு 3 என்ற கோல் வித்தியாசத்தில் அல்-அஹ்லி அணி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அல்-நசர் அணி தோல்வி அடைந்ததால், ரொனால்டோவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுவரை, அல்-நசர் அணிக்காக ரொனால்டோ கோப்பை வென்றதில்லை என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Next Story
